‘கான்பரா அகதி ஆதரவு’ (Canberra Refugee Support) (CRS)  உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

கான்பராவுக்குள் குடியமர உதவுகிறது.

CRS, கான்பராவில் அகதிகளுக்கும் புகலிடம் தேடுவோருக்கும் உள்ளூர் தன்னார்வ தொண்டர்களை அறிமுகம் செய்யும் ஒரு இலாபமீட்டும் நோக்கமற்ற நிறுவனமாகும்.  கான்பராவில் வசிப்பதற்காக குடியமரவும் முடிந்தவரை  சுதந்திரமாக வாழவும் தாம் ஆதரவளிக்கும் ஆட்களுக்கு உதவுவதற்காக, சிறந்த அயலவர்களாக இந்தத் தன்னார்வ தொண்டர்கள் செயற்படுகிறார்கள்.

தற்காலிக விசாவின் நிச்சயமற்றதன்மையுடன் வாழும் மக்கள், வேலைசெய்யும் உரிமை மறுக்கப்பட்டவர்கள், அத்துடன்  உள்ளூர் நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் புதிதாக வந்துசேர்ந்த அகதிகளுக்கு இது கடினமாக இருக்கலாமென்பதை நாம் விளங்கிக்கொள்ளுகிறோம்.

அகதிகள் மற்றும் புகலிடம் தேடுவோருக்கு ஆதரவளிக்கும் சகல CRS தன்னார்வ தொண்டர்களும் ‘பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களுடன் பணி’ ஆற்றும் அட்டை ஒன்றினை வைத்திருக்கிறார்கள்; அதாவது பாதுகாப்பாக உதவி வழங்குவதற்கு இவர்கள் பரிசீலிக்கப்பட்டு, பதிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

CRS தன்னார்வ தொண்டர்கள் உதவக்கூடியவை:

  • சமூகத்துடன் இணைவதும் நண்பர்களை உருவாக்கிக்கொள்ளுவதும்.
  • உள்ளூர் சேவைகளையும் ஆதரவையும் அணுகுதல்.
  • தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்
  • மலிவான உணவு, உடை, தளவாடம் மற்றும் வீட்டுப்பாவனைப்பொருள்களை பெற்றுக்கொள்ளல்
  • வேலை அல்லது தொழில்பயிற்சி வாய்ப்புக்களைத் தேடுதல்
  • ஆங்கிலமொழியை மேம்படுத்தல்
  • பாடசாலை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்துதல்

மின்னஞ்சல்: info@canberrarefugee.org.au